பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
UPDATED : ஜூலை 09, 2025 07:15 PM
ADDED : ஜூலை 09, 2025 06:59 PM

விந்தோக்: நமீபியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது 140 கோடி இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அடுத்த கட்டமாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றார். நமீபியாவின் விண்ட்ஹோக்கில் தரையிறங்கிய மோடியை அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்றார்.
பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி, வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு குதூகலமாக பிரதமர் மோடி மேளம் கொட்டி மகிழ்ந்தார். பின்னர், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'வெல்விட்சியா மிராபிலிஸ்' என்ற விருதை நமீபியா அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா வழங்கினார்.
விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது; இந்த கவுரவம் எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்காக உள்ளது. இதை பெருமையுடன் ஏற்கிறேன். நமீபியா மக்கள், அரசாங்கம் மற்றும் அதிபருக்கு மனமார்ந்த நன்றி, எனக் கூறினார்.