சொந்த மக்களை கொன்றவர்': பாக்., ராணுவ தளபதிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
சொந்த மக்களை கொன்றவர்': பாக்., ராணுவ தளபதிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
UPDATED : ஜூன் 17, 2025 10:26 PM
ADDED : ஜூன் 17, 2025 09:10 PM

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு எதிராக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கோஷம் போட்டனர். 'சொந்தநாட்டு மக்களை கொன்றவர், படுகொலை செய்தவர் என கோஷம் போட்டனர்.
பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசினார். இவர் ஆத்திரமூட்டும் வகையில் பேசி வருகிறார்.
அவர், அமெரிக்கா உடனான ராணுவம் மற்றும் பிராந்திய உறவை மேம்படுத்த வாஷிங்டன் சென்றுள்ளார். ஐந்து நாட்கள் தங்கி உள்ளார்.
இதனையறிந்த பாகிஸ்தானியர்கள் பலர், அவர் தங்கியிருந்த ஓட்டல்முன்பு ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
'ஆசிம் முனீர் , நீங்கள் கோழை', ' படுகொலை செய்தவர், வெட்கப்பட வேண்டும்,''
சர்வாதிகாரி, 'பாகிஸ்தானியர்களை கொன்றவர்' என கோஷம் போட்டனர். அந்த வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், ' துப்பாக்கி பேசும் போது, ஜனநாயகம் இறக்கிறது,', ஆசிம் கொலைகாரர்' என்ற வாசகங்களை ஒளிரச் செய்யும் வாகனங்களை கொண்டு வந்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.