அமெரிக்கா இனி உதவாது; சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
அமெரிக்கா இனி உதவாது; சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ADDED : பிப் 16, 2025 09:43 AM

கீவ்: 'ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவத்தை உருவாக்க வேண்டும். பாதுகாப்புக்கு இனி அமெரிக்கா உதவாது' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனில் நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ஜெலன்ஸ்கி பேசியதாவது: ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவத்தை உருவாக்க வேண்டும். பாதுகாப்புக்கு இனி அமெரிக்கா உதவாது. அமெரிக்கா ஐரோப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ரஷ்யாவை எதிர்கொள்ள பாதுகாப்பு அவசியம். இதனால் பொது ராணுவத்தை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது.
ரஷ்யாவிற்கு எதிரான தனது நாட்டின் போராட்டமக அதற்கான அடித்தளத்தை உருவாக்கி உள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம் வேண்டும் என்பது குறித்து பல தலைவர்கள் நீண்ட காலமாக பேசி வருகின்றனர். உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். நாடு பாதுகாப்பு உத்தரவாதங்களை விரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையேயான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைனின் எதிர்காலம் முக்கியப் பொருளாக இருந்தது. 3 ஆண்டு கால ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உருவாக்கி உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.