UPDATED : ஜூலை 28, 2011 03:11 AM
ADDED : ஜூலை 27, 2011 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், 170 மில்லியன் மதிப்புடைய போலி யுவான் நோட்டுகள் வைத்திருந்த 16 பேர் அடங்கிய கும்பலினர், போலீசிடம் பிடிபட்டனர்.
இவர்கள் அனைவருக்கும், 54 ஆயிரத்து 400 டாலர் அபராதமும், கும்பலின் தலைவனுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதர 15 பேருக்கும், பல்வேறு வகையாக சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டன.