ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது என்கிறார் அதிபர் புடின்
ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது என்கிறார் அதிபர் புடின்
UPDATED : அக் 24, 2025 08:33 AM
ADDED : அக் 24, 2025 07:48 AM

மாஸ்கோ: ''ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது'' என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்காததால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அமல்படுத்தினார். உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த இரு நிறுவனங்களும், 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன.
ரஷ்ய அரசுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன. இது குறித்து அதிபர் புடின் கூறியதாவது: அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தோ வரும் அழுத்தங்களுக்கு ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது. ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ரஷ்யா மீதான தடைகள் நட்பற்ற செயல். இது சில விளைவுகளை ஏற்படுத்தும். அவை நமது பொருளாதார நல்வாழ்வை கணிசமாக பாதிக்காது. ரஷ்யாவின் எரிசக்தி துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது நிச்சயமாக ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சி தான். சுயமரியாதை கொண்ட எந்த நாடும் அப்படி செய்யாது. இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.

