கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி
கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி
ADDED : அக் 03, 2025 12:19 PM

பொகொட்டா: ''கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவன தயாரிப்பு வாகனங்கள காண்பதில் மகிழ்ச்சி. இந்திய நிறுவனங்கள் தங்கள் படைப்பாற்றலால் எத்தகைய சூழலையும் வெற்றி கொள்ள முடியும். கிரேட் ஜாப்'' என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள இ.ஐ.ஏ., பல்கலையில், மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், மத்திய பா.ஜ., அரசை விமர்சித்தார். இதற்கு பாஜ அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வாகனத்துடன் நிற்கும் புகைப்படத்தை ராகுல் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவன தயாரிப்பு வாகனங்களை காண்பதில் மகிழ்ச்சி.
இந்திய நிறுவனங்கள் தங்கள் படைப்பாற்றலால் எத்தகைய சூழலையும் வெற்றி கொள்ள முடியும். சிறப்பான செயல்!
இந்தியாவில் பல்வேறு மதங்கள், பாரம்பரியங்கள், மொழிகள் உள்ளன. இந்தியா என்பது அனைத்து தரப்பு மக்கள் இடையிலான ஒரு கலந்துரையாடல் கொண்ட நாடு. தற்போது இந்தியாவில் ஜனநாயக நடைமுறைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே அது மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொண்டு இருக்கிறது.
பல்வேறு பாரம்பரியங்கள் செழித்து இருக்க, ஒவ்வொரு தரப்பினருக்கும் அவர்களுக்குரிய இடத்தை வழங்குவது இந்தியா போன்ற நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. சீனாவை போல சர்வாதிகார நடைமுறையில் மக்களை ஒடுக்கி நாட்டை வழிநடத்த முடியாது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.