ADDED : டிச 04, 2024 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலாலம்பூர்,தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேஷியா மற்றும் தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு மலேஷியாவின் கெலந்தன் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. வெள்ளத்தில் சிக்கி தவித்த, 91,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை மற்றும் வெள்ளம் தொடர்பான பாதிப்புகளில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதேபோல் தாய்லாந்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 25 பேர் பலியாகியுள்ளனர்.