தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/மன்மோகனை சந்திக்க முடியாமல் இலங்கை திரும்பிய ராஜபக்சே

மன்மோகனை சந்திக்க முடியாமல் இலங்கை திரும்பிய ராஜபக்சே

மன்மோகனை சந்திக்க முடியாமல் இலங்கை திரும்பிய ராஜபக்சே


UPDATED : அக் 01, 2013 01:33 AM

ADDED : செப் 29, 2013 11:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2013 01:33 AM ADDED : செப் 29, 2013 11:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்:பிரதமர் மன்மோகன் சிங்கை, சந்திக்க முடியாமல், இலங்கை அதிபர் ராஜபக்சே, கொழும்பு திரும்பினார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில், உரையாற்றுவதற்காக, அமெரிக்கா சென்ற பிரதமர், மன்மோகன்சிங், அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து, பல்வேறு விஷயங்களை விவாதித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்தும், ஒபாமாவிடம் எடுத்துரைத்தார். இதற்கிடையே, அமெரிக்கா வந்த, இலங்கை அதிபர் ராஜபக்சே, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய பின், மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்காக, நியூயார்க்கில் காத்திருந்தார்.

ஆனால், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துவிட்டு நியூயார்க் புறப்பட்ட பிரதமர், மன்மோகன் சிங், 3 மணி நேரம் தாமதமாக வந்ததால், அவரை சந்திக்காமலேயே இலங்கை அதிபர் ராஜபக்சே, கொழும்பு திரும்பினார். 'அதிகாரப்பூர்வமற்ற முறையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்திக்க, மன்மோகன் சிங், விரும்பவில்லை' என, அவரது அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us