sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா-ரஷ்யா நட்புறவு; ரஷ்யாவில் புடினை சந்தித்த ராஜ்நாத் சிங் பெருமிதம்

/

இந்தியா-ரஷ்யா நட்புறவு; ரஷ்யாவில் புடினை சந்தித்த ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்தியா-ரஷ்யா நட்புறவு; ரஷ்யாவில் புடினை சந்தித்த ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்தியா-ரஷ்யா நட்புறவு; ரஷ்யாவில் புடினை சந்தித்த ராஜ்நாத் சிங் பெருமிதம்

7


ADDED : டிச 11, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 11, 2024 08:01 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். பின்னர் பேசிய அவர், இந்தியா-ரஷ்யா நட்புறவு, உலகின் மிக உயர்ந்த மலையை விட உயரமானது; உலகின் மிக ஆழமான கடலைக் காட்டிலும் ஆழமானது என்றார்.

அரசு முறை பயணமாக, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ளார். அவர், இந்தியா-ரஷ்யா ராணுவ ஒத்துழைப்புக்கான குழுவின் மாநாட்டில் பங்கேற்றார். மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். இருநாட்டு தலைவர்களும் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.

'ரஷ்யா-இந்தியாவுக்கு இடையிலான உறவு மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது' என இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர். அப்போது, ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியா-ரஷ்யா நட்புறவு உலகின் மிக உயரமான மலையை விட உயர்ந்தது. உலகின் மிக ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா தனது ரஷ்யா நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் அதை தொடருவோம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us