ADDED : ஜூன் 16, 2026 05:28 PM

பாரீஸ்: அமெரிக்க தாக்குதலில், ஈரானில் பல தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது அங்கு பகுத்தறிவு ஆட்சியாளர்கள் உள்ளதாக நினைக்கிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
பிரான்சில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்றுள்ள அதிபர் டிரம்ப் கூறியதாவது:அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்ப லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நான் விரும்பவில்லை. எனது அதிருப்தியை இஸ்ரேல் தலைவர்கள் அறிவார்கள். அதனை தெரிய செய்தேன்.அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, ஈரானில் முதலீடு செய்ய வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இல்லை. ஈரானில் முதலீடு செய்ய மாட்டோம். ஈரான் அணு ஆயுதம் பெறக்கூடாது என்பதே எங்களின் முக்கியமான நோக்கமாகும்.ஈரான் அணு ஆயுதம் பெற்றால் அந்நாடு மீது அனைத்து நரகமும் பொழியும்.ஈரானுடன் ஒப்பிடுகையில், லெபனான் மீதான தாக்குதல் சிறியது. இதனால் ஈரானுடனான ஒப்பந்தம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.கடந்த வாரம் ஈரான் மீது தாக்குதல் நடத்த விரும்பவில்லை. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை.ஈரானுடான அமைதி ஒப்பந்தம் நியாயமானது. இதனால், அந்நாட்டுனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கும்.
லெபனான் மீதான விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புடன் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கிறேன். நான் இல்லையென்றால் இஸ்ரேல் இருந்திருக்காது. நான் செய்ததை மற்ற அதிபர்கள் செய்திருக்க விரும்ப மாட்டார்கள்.
ஈரான் அணு ஆயுதம் பெற்றால், அது அனைத்து நரகத்தின் வாயில்களை திறக்கும். அமைதி ஒப்பந்தத்தின்படி ஈ ரான் அணு ஆயுதம் பெற முடியாது. அல்லது அதனை கைவிட வேண்டும்.
ஈரானில் தற்போது பகுத்தறிவு உள்ள தலைவர்கள் உள்ளனர். பகுத்தறிவு அற்றவர்களின் சகாப்தம் ஈ ரானில் முடிந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
