இந்தியாவை விட வலுவான உறவுக்கு தயார்: ரஷ்ய அதிபரிடம் பாக்., பிரதமர் உறுதி
இந்தியாவை விட வலுவான உறவுக்கு தயார்: ரஷ்ய அதிபரிடம் பாக்., பிரதமர் உறுதி
ADDED : செப் 04, 2025 06:32 AM

பீஜிங்: ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், இந்தியா, ரஷ்யா இடையான உறவை நாங்கள் மதிக்கிறோம்; அதைவிட வலுவான உறவை வைத்திருக்க நாங்கள் விருப்புகிறோம், என, குறிப்பிட்டார்.
நம் அண்டை நாடான சீனாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டங்களுக்கு இடையே, ரஷ்ய அதிபர் புடினை, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சந்தித்து பேசினார்.
அப்போது ஷெபாஸ் ஷெரிப் கூறியதாவது:
இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் நாங்கள் ரஷ்யாவுடன் வலுவான உறவை கட்டமைக்க விரும்புகிறோம். இது நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு துணையாக இருக்கும்.
ரஷ்ய அதிபர் புடின் மிக துடிப்பான தலைவர். மேலும் தெற்காசியாவில் ரஷ்யாவின் சமநிலைப்படுத்தும் செயலை பாராட்டுகிறேன். பல்வேறு வகையில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து உதவும் ரஷ்யாவுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.