sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர்; மசூத் அசார் கொக்கரிப்பு

/

ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர்; மசூத் அசார் கொக்கரிப்பு

ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர்; மசூத் அசார் கொக்கரிப்பு

ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர்; மசூத் அசார் கொக்கரிப்பு

25


ADDED : ஜன 12, 2026 07:08 AM

Google News

ADDED : ஜன 12, 2026 07:08 AM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தனது அமைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்க தயாராக இருப்பதாக புதிய ஆடியோ வெளியிட்டு மசூத் அசார் மிரட்டல் விடுத்துள்ளான்.

சோவியத் யூனியன்-ஆப்கன் போரின் போது ஆப்கானிஸ்தானில் இருந்த அசார் 2016 பதான்கோட் விமானப்படைத் தள தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் உட்பட பல பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவன்.

கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்திய பாதுகாப்பு படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தளங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அதில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளமும் அழிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் இருந்து மீண்ட பிறகு, இப்போது ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசார் மீண்டும் இந்தியாவை அச்சுறுத்தும் ஆடியோவை வெளியிட்டு உள்ளான்.

மிரட்டல் ஆடியோவில் அவன் தெரிவித்து இருப்பதாவது: எனது அமைப்பில் உள்ள பயங்கரவாதிகள் எந்த உலக வசதிகளையும் அல்லது வேறு எந்த நன்மைகளையும் கேட்பதில்லை. இந்தத் தற்கொலைப் படையினர் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். முழு எண்ணிக்கையை நான் உங்களிடம் சொன்னால், நாளை உலக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்படும், என ஆடியோவில் தெரிவித்து உள்ளான்.






      Dinamalar
      Follow us