தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/இந்தியாவுடன் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது; சொல்கிறது ஈரான்

இந்தியாவுடன் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது; சொல்கிறது ஈரான்

இந்தியாவுடன் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது; சொல்கிறது ஈரான்


ADDED : செப் 08, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 06:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டெஹ்ரான்: இந்தியாவுடனான தனது உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்தார்.

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற நம் பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் மசூத் பெஷெஷ்கியான சந்தித்து பேசினார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், இது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறும் வகையில், ஈரானுக்கு எந்த நாடாவது உதவினாால், அந்த நாடுகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்து இருந்தார். தற்போது இந்தியாவுடனான தனது உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது: இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் ஆகிய இரண்டிலும் உறுப்பினராக உள்ளது. வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் நல்லுறவைப் பேணிவரும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும்; இந்தியாவுடனான தனது உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us