தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ இலங்கைக்கு நிவாரண பொருள் அனுப்பிவைப்பு

இலங்கைக்கு நிவாரண பொருள் அனுப்பிவைப்பு

இலங்கைக்கு நிவாரண பொருள் அனுப்பிவைப்பு


ADDED : நவ 30, 2025 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நம் அண்டை நாடான இலங்கையை புரட்டிப் போட்ட 'டிட்வா' புயலுக்கு இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 191 பேர் மாயமாகியுள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதையடுத்து அங்கு, அவசரநிலையை, அந்த நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயகே அறிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 21 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் சென்ற நம் விமானப் படைக்கு சொந்தமான விமானம் நேற்று இலங்கையை அடைந்தது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற நம் நாட்டின் கொள்கைக்கு ஏற்ப, இந்த உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us