/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாழ்வான சிக்னல் ஒயர் சரி செய்ய வேண்டுகோள்
/
தாழ்வான சிக்னல் ஒயர் சரி செய்ய வேண்டுகோள்
ADDED : ஜன 01, 2026 04:31 AM
குளித்தலை: கருப்பத்துாரில், தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வாக அமைக்கப்-பட்ட போக்குவரத்து சிக்னல் தடுப்பு ஒயர்களை சரி செய்ய வேண்டும்.
குளித்தலை அடுத்த கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருப்பத்துார் ஐயப்பன் மற்றும் சிவன் கோவில் அருகே, தென்-கரை பாசனை வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து இளைப்பாறுவதற்காக, வாகனங்களை சாலையின் இரு புறமும் ஓரமாக நிறுத்தி வருவது வழக்கம்.
மேலும் கோவில் அருகே, அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்தும், உயிரிழப்பும் ஏற்பட்டு வந்ததால், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சோலார் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிக்னல்களை இணைக்கும் ஒயர் மிகவும் தாழ்வாகவும், சாலையில் இருந்து ஐயப்பன் கோவி-லுக்கு நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூ-றாகவும் அமைந்துள்ளது.
எனவே அதனை சரி செய்து தாழ்வாக உள்ள சிக்னல் கம்பி ஒயர்-களை, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்வதற்கு இடையூறாக இல்லாதவாறு மேல் நோக்கி அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

