சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / உலகம் / இந்தியா பதிலடி / இந்தியா பதிலடி
/
செய்திகள்
இந்தியா பதிலடி
ADDED : பிப் 08, 2025 02:26 AM
ஷேக் ஹசீனாவின் பேச்சு குறித்து வங்கதேசத்தில் உள்ள நம் நாட்டு துாதரகத்தில், அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் கவலை தெரிவித்திருந்தது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது: வங்கதேசத்துடன் நேர்மறையான, ஆக்கப்பூர்வமான, பரஸ்பர நன்மை பயக்கும் உறவை இந்தியா விரும்புகிறது. சமீபத்தில் நடந்த உயர்மட்டக் கூட்டங்களிலும் இந்த கருத்து வலியுறுத்தப்பட்டது.இருப்பினும், அந்நாட்டில் நடக்கும் உள் நிர்வாகப் பிரச்னைகளுக்கு இந்தியா காரணம் என்பது போல, வங்கதேச அதிகாரிகள் சித்தரிப்பது கவலையளிக்கிறது. ஷேக் ஹசீனாவின் பேச்சு முழுதும் அவரின் தனிப்பட்ட கருத்துகள். அதில், எங்கள் நாட்டுக்கு எந்த பங்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக டில்லியில் உள்ள வங்கதேச துாதரை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்து மத்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.