'ரோல் பால்' உலக கோப்பை: இந்திய ஆண், பெண்கள் அணிகள் சாம்பியன்
'ரோல் பால்' உலக கோப்பை: இந்திய ஆண், பெண்கள் அணிகள் சாம்பியன்
ADDED : டிச 19, 2025 02:19 AM

துபாய்: 'ரோல் பால்' உலக கோப்பை தொடரில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் சாம்பியன் ஆகின.
சர்வதேச ரோல் பால்' கூட்டமைப்பு சார்பில் 7வது உலக கோப்பை தொடர் துபாயில் நடந்தது. கூடைப்பந்து, ஹேண்ட்பால், ரோலர் ஸ்கேட்டிங் என மூன்றையும் சேர்த்து 'ரோல் பால்' என விளையாடப்படுகிறது.
பெண்களுக்கான பைனலில் இந்திய அணி, தொடர்ந்து இருமுறை சாம்பியன் ஆன கென்யாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. கென்யாவின் 'ஹாட்ரிக்' வாய்ப்பை தகர்த்தது. முன்னதாக இந்தியா 2013, 2017ல் கோப்பை வென்றது. 2023ல் புனேயில் நடந்த தொடரில் மூன்றாவது இடம் பெற்றிருந்தது.
ஆண்கள் அபாரம்
ஆண்கள் பிரிவு பைனலில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் கென்யாவை எதிர்கொண்டது. ஒரு கட்டத்தில் 4-8 என இந்தியா பின் தங்கி இருந்தது. முடிவில் இந்திய அணி 11-10 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. முன்னதாக, தொடர்ந்து 4 முறை (2013, 2015, 2017, 2019) கோப்பை வென்றிருந்தது.

