மியாமி போலீசாருக்கு ரோந்து பணிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்
மியாமி போலீசாருக்கு ரோந்து பணிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்
ADDED : மே 12, 2024 04:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மியாமி: அமெரிக்காவின் மியாமி கடற்கரை போலீசார் ரோந்து பணிக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்துவது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ளது மியாமி. இந்நகரில், போலீஸ் படைக்கான ஆட்சேர்ப்பு பகுதியின் ஒரு அங்கமாக விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார், ரோந்து பணிக்காக வழங்கப்பட்டு உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். கருப்பு நிறம் கொண்ட இந்த கார் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனையடுத்து இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
இணையதளவாசி ஒருவர், இது மக்களின் வரிப்பணம் என கருத்து தெரிவிக்க, அவருக்கு பதிலளித்துள்ள மியாமி போலீசார், ரோல்ஸ் ராய்ஸ் காரை தயாரிக்கும் பிராமன் மோட்டார்ஸ் நிறுவனமே அதற்கான செலவை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.