காதல் ஜோடிகளின் விருப்பம்; 'டாப் 10' சுற்றுலா மையங்கள் இவை தான்!
காதல் ஜோடிகளின் விருப்பம்; 'டாப் 10' சுற்றுலா மையங்கள் இவை தான்!
ADDED : செப் 25, 2024 07:36 PM

பாரீஸ்: உலகின் ரொமான்டிக் தலைநகராக நீண்ட காலம் முதலிடத்தில் இருந்த பாரீஸ், தற்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவின் ஹவாய் தீவு முதலிடத்திற்கு வந்துவிட்டது.
திருமணமான தம்பதிகள் தேனிலவு செல்வதற்கும், காதல் ஜோடிகள் உல்லாசப் பயணம் செல்வதற்கும், தம்பதிகள் ஜாலி டூர் செல்வதற்கும் தேர்வு செய்யும் நகரங்களை ரொமான்டிக் நகரங்கள் என்பர். அந்த பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்தது பிரான்ஸ் தலைநகர் பாரீஸ். இப்போது நிலவரம் எப்படி, ரொமான்டிக் நகராக கருதி, எந்த நாட்டிற்கு அல்லது நகருக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள் என்று, 2000 அமெரிக்க ஜோடிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலோனோர், 34 சதவீதம் பேர், ஹவாய் தீவில் உள்ள மாவியை தேர்வு செய்துள்ளனர். பாரிஸ் நகருக்கு 2வது இடமே கிடைத்தது.
ஹவாய் தீவுகள், தம்பதியருக்கு மிகுந்த காதல் உணர்வுகளை எற்படுத்துவதாக பலரும் கூறுகின்றனர். அங்குள்ள ரிசார்ட்ஸ், கடற்கரைகள், மூங்கில் வனம், அழகான சூரிய அஸ்தமம் ஆகியவற்றால் பலரும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் தந்துள்ளனர்.
பாரீஸ், இப்போது 33 சதவீதம் ஜோடிகளின் ஆதரவுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த ஆய்வை, பன்ஜெத் சுற்றுலாத்துறை டாக்கர் அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவுகள் இப்படி வெளியாகியுள்ளன.
பட்டியலின் படி,
1.மாவி, ஹவாய் 2.பாரிஸ், பிரான்ஸ் 3.ரோம், இத்தாலி 4.வெனிஸ், இத்தாலி 5.சான்சன், மெக்சிகோ6.டஸ்கனி, இத்தாலி 7.கோஸ்டாரிகா 8.பிரி்ட்டிஷ் விர்ஜின்தீவுகள் 9.செயின்ட் லுாசியா 10.சான்டோரினி, கிரீஸ் ஆகிய இடங்கள் காதல் ஜோடிகள், தம்பதிகள் விரும்பும் முதல் 10 இடங்களாக உள்ளன.