sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கச்சா எண்ணெய் விற்பனையை தடுக்க சர்வதேச நாடுகளை மிரட்டும் அமெரிக்கா; ரஷ்யா குற்றச்சாட்டு

/

கச்சா எண்ணெய் விற்பனையை தடுக்க சர்வதேச நாடுகளை மிரட்டும் அமெரிக்கா; ரஷ்யா குற்றச்சாட்டு

கச்சா எண்ணெய் விற்பனையை தடுக்க சர்வதேச நாடுகளை மிரட்டும் அமெரிக்கா; ரஷ்யா குற்றச்சாட்டு

கச்சா எண்ணெய் விற்பனையை தடுக்க சர்வதேச நாடுகளை மிரட்டும் அமெரிக்கா; ரஷ்யா குற்றச்சாட்டு

1


ADDED : பிப் 11, 2026 10:07 PM

Google News

1

ADDED : பிப் 11, 2026 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெ ய் வாங்குவதை தடுப்பதற்காக, மிரட்டல் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது. ரஷ்யாவின் நிதி ஆ தாரத்தை முடக்கினால் போர் நின்று விடும் என கருதிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதன்படியே, இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தார் அதிபர் டிரம்ப். இதில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட அபராத வரி, 25 சதவீதமும் அடங்கும். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாக குறைத்து வருகிறது. இதனால், அபராத வரியை ரத்து செய்த அமெரிக்கா, பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து, 18 ஆக குறைத்தது.

இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்கவே, மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. வரிகள், தடைகள் வாயிலாக உலகப் பொருளாதாரத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட அந்நாடு முயற்சிக்கிறது.

மலிவான ரஷ்ய எரிபொருளை தடுத்து, அதிக விலையுள்ள அமெரிக்க எரிவாயுவை விற்க அந்நாடு முயற்சித்து வருகிறது. மேலும், 'பிரிக்ஸ்' நாடுகளின் வர்த்தகம், முதலீடு மற்றும் ராணுவ உறவுகளை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா முயல்கிறது. இந்தியாவுக்கான வரியை குறைத்துள்ள டிரம்ப் நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதையே நிபந்தனையா க விதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us