பற்றி எரிகிறது ரஷ்யா: ஒரே நேரத்தில் 1600 ட்ரோன்களை ஏவி உக்ரைன் அதிரடி தாக்குதல்
பற்றி எரிகிறது ரஷ்யா: ஒரே நேரத்தில் 1600 ட்ரோன்களை ஏவி உக்ரைன் அதிரடி தாக்குதல்
ADDED : செப் 20, 2026 05:04 PM

மாஸ்கோ: ரஷ்யா மீது 1600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி, இதுவரை இல்லாத அளவுக்கு உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் 4 ஆண்டுகளை கடந்தும் ஓயவில்லை. இருநாடுகளும் எவ்வித சமரசத்திற்கும் தயாரின்றி பரஸ்பரம் தாக்குதலை நடத்தி வருகிறது. கச்சா எண்ணெய் ஆலைகளை தாக்க மாட்டோம் என்று உக்ரைனும், ரஷ்யாவும் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது.
இந் நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 1600க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி உக்ரைன் அதிரடியாக தாக்குதல் நடத்தி இருக்கிறது. தாக்குதலில் மாஸ்கோவில் இருக்கும் கப்போட்ன்யா (Kapotnya) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
உக்ரைனின் அதிரடி தாக்குதலை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது குறித்து மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில்,' இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் ரஷ்யாவின் தலைநகர் மீது இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல் ஆகும். தாக்குதலில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, குடியிருப்பு கட்டடம் சேதம் அடைந்தது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பேர் காயம் அடைந்துள்ளனர் ' என்றார்.
