புரெவெஸ்ட்னிக் ஏவுகணை சோதனை வெற்றி; அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்
புரெவெஸ்ட்னிக் ஏவுகணை சோதனை வெற்றி; அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்
ADDED : அக் 26, 2025 05:43 PM

மாஸ்கோ: அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் - இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், போர் முடிவுக்கு வந்த பாடில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையான புரெவெஸ்ட்னிக், சுமார் 15 மணிநேரம் தொடர்ச்சியாக பறந்து சென்று, 14,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தது.
பாதுகாப்புத்துறை தளபதி மற்றும் ராணுவ கமாண்டர்களுடன் காணொளி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின் போது, புரெவெஸ்ட்னிக் ஏவுகணையை பாதுகாப்பு படையில் இணைப்பதற்கான உள்கட்டமைப்பை தயார் செய்ய அவர் உத்தரவிட்டார்.
உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாத நிலையில், தற்போது அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றியடைந்திருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

