sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விண்வெளிக்கு பயணிக்கிறது ஒலிம்பிக் ஜோதி

/

விண்வெளிக்கு பயணிக்கிறது ஒலிம்பிக் ஜோதி

விண்வெளிக்கு பயணிக்கிறது ஒலிம்பிக் ஜோதி

விண்வெளிக்கு பயணிக்கிறது ஒலிம்பிக் ஜோதி


ADDED : ஜூலை 12, 2011 03:29 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டர்பன்: ரஷ்யாவில் துவங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளையொட்டி முதன்முதலாக ஒலிம்பிக் ‌ஜோதி விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அந்நாட்டு துணைப்பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் தென்ஆப்ரிக்காவின் டர்பனில் கடந்த 8-ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவில் துணைப்பிரதமர் அலெக்ஸாண்டர் ஜூகூவோவ் கூறியதாவது: ரஷ்யாவில் வரும் 2014-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சோச்சி மாகாணத்தில் துவங்குகிறது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் சார்பில் 120 நாட்களுக்கு 28 ஆயிரம் கி.மீ தூரம் பயணித்து இந்த ஒலிம்பிக் ஜோதி நடக்கிறது. இதற்காக 14 ஆயிரம் பேர் இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி வரவுள்ளனர். முன்னதாக முதன்முறையாக விண்வெளிக்கு ஒலிம்பிக் ஜோதியை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ரஷ்யாவில் மிகப்பெரிய மலைஉச்சிக்கும், உலகின் மிகவும் அழமான ஏரிக்கு அடியிலும் இந்த ஒலிம்பிக் ஜோதி கொண்டுசெல்லப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












      Dinamalar
      Follow us