தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 5 பேர் பலி

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 5 பேர் பலி

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 5 பேர் பலி


ADDED : ஜன 28, 2026 09:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 09:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிவ்: உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். பிற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள், பல பகுதிகளை கைப்பற்றியுள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அண்மையில் முதல்முறையாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், கார்கிவ் பகுதியில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தில் 5 பேர் உடல் கருதி உயிரிழந்தனர். 4 பேர் மாயமாகினர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,'எந்தவொரு நாட்டிலும், பொதுமக்கள் செல்லும் ரயில் மீது டிரோன் தாக்குதல் நடத்தினால், அது பயங்கரவாதமாகவே கருதப்படும். இதில் எந்தவிதமான ராணுவ நோக்கமும் இருக்கவும் முடியாது,' என்றார்.

அதேபோல, தெற்கு நகரமான ஒடேசாவில் ரஷ்யா நடத்திய 50க்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us