சீனாவில் ரஷ்ய அதிபர் புடின்- வடகொரியா அதிபர் சந்திப்பு: ஒரே காரில் பயணம்!
சீனாவில் ரஷ்ய அதிபர் புடின்- வடகொரியா அதிபர் சந்திப்பு: ஒரே காரில் பயணம்!
ADDED : செப் 03, 2025 02:08 PM

பீஜிங்: இரண்டாம் உலகப்போர் வெற்றி கொண்டாட்டத்தின் 80ம் ஆண்டு விழா முன்னிட்டு சீனா நடத்திய ராணுவ அணிவகுப்பை பார்வையிட வந்த ரஷ்ய அதிபர் புடின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் இரண்டாம் உலகப்போர் வெற்றி கொண்டாட்டத்தின் 80ம் ஆண்டு விழா முன்னிட்டு ராணுவ அணுவ வகுப்பு நடந்தது. இந்த அணி வகுப்பில் 25க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, பீஜிங்கில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்தார். இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு, இரு தலைவர்களும் அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்தனர்.
முன்னதாக இருவரும் பேச்சுவார்த்தைக்கு ஒரே காரில் பயணம் செய்தனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்து உள்ளது. சந்திப்பின் போது ரஷ்யாவிற்கு உதவுவது வட கொரியாவின் கடமை என்று கிம் ஜாங் உன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.