sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரானுக்கு ஆதரவை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்; புதிய ஆட்சியாளருக்கு வாழ்த்து

/

ஈரானுக்கு ஆதரவை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்; புதிய ஆட்சியாளருக்கு வாழ்த்து

ஈரானுக்கு ஆதரவை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்; புதிய ஆட்சியாளருக்கு வாழ்த்து

ஈரானுக்கு ஆதரவை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்; புதிய ஆட்சியாளருக்கு வாழ்த்து

5


UPDATED : மார் 10, 2026 06:26 AM

ADDED : மார் 09, 2026 04:38 PM

Google News

5

UPDATED : மார் 10, 2026 06:26 AM ADDED : மார் 09, 2026 04:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ; ரஷ்யா ஈரானுக்கு தொடர்ந்து துணை நிற்கும் என்று கூறிய ரஷ்ய அதிபர் புடின், தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய ஆட்சியாளருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் மறைந்த ஆட்சியாளரின் மகனான மொஜ்தபா கமேனி, இஸ்லாமியக் குடியரசின் அடுத்த ஆட்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: ரஷ்யா ஈரானுக்கு தொடர்ந்து துணை நிற்கும். ஈரானுக்கு ஆதரவையும், ஈரான் நண்பர்களுடன் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் விரும்புகிறேன்.

மொஜ்தபா கமேனி தனது தந்தையின் பணியை கவுரவத்துடன் தொடர்வார். கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளும் போது ஈரான் மக்களை ஒன்றிணைப்பார் என்று நான் நம்புகிறேன். ஈரான் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் ஒரு நேரத்தில், இந்த உயர் பதவியில் சவால்களை சந்திக்க தைரியமும், அர்ப்பணிப்பும் தேவைப்படும். இவ்வாறு புடின் கூறினார்.

முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசிய புடின், ஈரான் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி, கமேனியின் குடும்ப உறுப்பினர்கள், ஈரான் அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார் என்பது குறிப்பித்தக்கது.






      Dinamalar
      Follow us