தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய சுத்திகரிப்பு ஆலை சேதம்

 உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய சுத்திகரிப்பு ஆலை சேதம்

 உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய சுத்திகரிப்பு ஆலை சேதம்


ADDED : ஜூன் 19, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா இடையே பரஸ்பரம் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தீப்பிடித்து பலத்த சேதமடைந்தது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இப்போரை நிறுத்துவதற்காக நடத்தப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோதும், ரஷ்யா தன் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இவ்வார தொடக்கத்தில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில், 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க, யுனெஸ்கோ பராம்பரிய சின்னமான, 'பெச்செர்ஸ்க் லாவ்ரா' சர்ச் கடுமையாக சேதமடைந்தது. இதில், 5க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதைதொடர்ந்து நேற்றும், கீவ் நகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கபோட்நியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, உக்ரைன் நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில், அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து நேர்ந்தது. ஒரே வாரத்தில் இந்த ஆலை மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

இந்த சுத்திகரிப்பு நிலையம் மாஸ்கோ பிராந்தியத்தின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 40 சதவீத பெட்ரோல், 50 சதவீத டீசலை வினியோகிக்கும் மிக முக்கிய ஆலையாகும்.

இத்தாக்குதலை தொடர்ந்து ஆலையின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இத்தாக்குதலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சில வணிக வளாகங்களும் சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர் ட்ரோன் தாக்கு தல்களால் ரஷ்யாவின் மூன் றில் ஒரு பங்கு எண்ணெய் சுத்திகரிப்பு திறன் முடங்கியுள்ளது.

இதனால், உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யா, தற்போது கடல்வழியாக எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டா யத்திற்கு தள்ளப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக மாஸ்கோவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பயணியர் வெளியேற்றப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us