உக்ரைனில் இரு கிராமங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்: ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனில் இரு கிராமங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்: ரஷ்யா அறிவிப்பு
ADDED : டிச 07, 2025 04:12 PM

கீவ்: உக்ரைனில் இரண்டு கிராமங்களை பிடித்துவிட்டதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர் பல ஆண்டுகள் கடந்தும் ஓயவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, 28 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தை முன் வைத்தது. ஆனால் அமெரிக்காவின் இந்த திட்டமானது, ஐரோப்பிய நட்பு நாடுகளின் தலையீடு இல்லாமலும், ரஷ்யாவின் நலன்களை பிரதிபலிப்பதாக உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
அமைதி திட்டம் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், உக்ரைனில் உள்ள இரண்டு கிராமங்களை பிடித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்ககம் கூறி உள்ளதாவது;
உக்ரைன் வடக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள குச்செரிவ்கா, கிழக்கு டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரிவ்னே ஆகிய இரு கிராமங்களை ரஷ்ய படைகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.
உக்ரைனின் போக்குவரத்து கட்டமைப்புகள், எரிபொருள் மற்றும் எரிசக்தி வசதிகள், ராணுவ விமான தளங்கள், ட்ரோன் வளாகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இவ்வாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

