கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை அறிவிப்பு
கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை அறிவிப்பு
UPDATED : ஆக 31, 2024 10:52 AM
ADDED : ஆக 31, 2024 10:37 AM

ரியாத்: சவுதி அரேபியரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செரும்பா என்ற பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் அப்துல்ரகுமான் 63. இவர் மீதான நடவடிக்கை குறித்து சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்; அப்துல்காதர் அப்துல்ரகுமான் சவுதி பிரஜையை கொலை செய்த வழக்கில் ஷரியத் கோர்ட் விசாரித்து மரணத்தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அப்துல்காதர் சுப்ரீம் கோர்ட்டில் (ராயல் கோர்ட் ) அப்பீல் செய்தார். இது நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து ரியாத் சிறையில் உள்ள அவர் போலீஸ் கஸ்டடியில் ஒப்படைக்கப்பட்டார். கொலை நடந்த இடத்தில் அப்துல்காதரின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்துல்காதரால் கொலை செய்யப்பட்ட நபர் யார் , பெயர் என்ற விவரம் உள்துறை வெளியிடவில்லை.
மற்றொரு கிரைம்: தம்பதியினர் கொலை
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் அணூப்மோன் 37, ரம்யாமோல் 28 இருவரும் சவுதியில் அல்கோபார் தவுபா என்ற இடத்தில் அவரது வீட்டில் பிணமாக கிடந்தனர். கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் 5 வயது குழந்தை அழுது கொண்டிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் வெளியே தெரிந்தது.
ஆண்டுதோறும் பலர்
2022 ல் 81 பேரும், 2023 ல் 170 பேரும், 2024 ல் 106 பேரும் மரணத்தண்டணை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.