தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்; சவுதியில் பதற்றம்

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்; சவுதியில் பதற்றம்

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்; சவுதியில் பதற்றம்


ADDED : மார் 02, 2026 01:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 01:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரியாத்: சவுதி அரேபியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோ மீது ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் உச்சகட்ட கோபமடைந்த ஈரான், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தும், அதனை ஏற்க மறுத்தது. மேலும், 3வது நாளாக மேற்காசிய நாடுகளில் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோவில் உள்ள ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக செயல்பட்டதால், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அராம்கோ ஆலை மூடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா - ஈரான் போரினால் கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், சவுதியில் எண்ணெய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தாக்கப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் சந்தையில் விலை புதிய உச்சத்தை தொட்டு விடுமோ? என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us