ஜெர்மனியில் சந்தைக்குள் புகுந்த கார்; 5 பேர் பலி; 68 பேர் பலத்த காயம்; சவுதி நபர் கைது
ஜெர்மனியில் சந்தைக்குள் புகுந்த கார்; 5 பேர் பலி; 68 பேர் பலத்த காயம்; சவுதி நபர் கைது
UPDATED : டிச 21, 2024 06:12 PM
ADDED : டிச 21, 2024 07:47 AM

பெர்லின்: ஜெர்மனியில் சந்தைக்குள் புகுந்த கார் மோதி 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 68 பேர் பலத்த காயமுற்றனர். காரை இயக்கிய, சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிச.,25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, ஜெர்மனியில், சண்டோனி அன்ஹாட் மாகாணம் மக்டக்பெர்க் நகரின் மையப் பகுதியில் சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. சந்தையில் மக்கள் ஆர்வமாக பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் சந்தைக்குள் புகுந்தது. சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் 68 பேர் பலத்த காயமுற்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கார் விபத்தை ஏற்படுத்திய, சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதல் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

