பாகிஸ்தானில் எஸ்.சி.ஓ., மாநாடு: மோடிக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு
பாகிஸ்தானில் எஸ்.சி.ஓ., மாநாடு: மோடிக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு
ADDED : ஆக 29, 2024 07:02 PM

புதுடில்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு நம் பிரதமர் மோடிக்கு,பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை கடந்த 2021ல் இந்தியா ஏற்றது.
இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் எஸ்.சி.ஓ. அமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் மாநாடும் நடைபெறுகிறது.
இதில் இந்தியா சார்பில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இன்று ( ஆக.,29) பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மும்தாஜ் ஜஹாரா பலோஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.