ரகசிய போலீஸ் 007?: இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு ரகசிய பயணம்?
ரகசிய போலீஸ் 007?: இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு ரகசிய பயணம்?
ADDED : ஆக 30, 2024 02:45 PM

கொழும்பு: இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது அலுவலகம் தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் இலங்கை பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
இலங்கையில் வரும் செப்.21 ல் பொதுதேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர் . இலங்கையில் சீன படையினர் கப்பல் நிறுத்தும் முயற்சி ஒரு புறம் இருப்பதால், இந்தியா இலங்கை அரசியலை உற்று நோக்கி கவனித்து வருகிறது.
இந்நிலையில் அஜித்தோவல் இலங்கை சென்றார்.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடக்கவுள்ள நிலையில் அவர் இலங்கை சென்றுள்ளார். இந்தியா, மாலத்தீவு, மொரிஷியஸ், வங்கதேசம் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்திய கடலோர பாதுகாப்பு , பிராந்திய ஒத்துழைப்பு ஆகியன குறித்து விவாதிக்கப்படும். இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினரையும் அஜித்தோவல் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.