தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/சுயமாக செயல்படும் 'ஏஐ' ஏஜென்ட்கள்; ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை

சுயமாக செயல்படும் 'ஏஐ' ஏஜென்ட்கள்; ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை

சுயமாக செயல்படும் 'ஏஐ' ஏஜென்ட்கள்; ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை


UPDATED : நவ 04, 2026 05:41 PM

ADDED : நவ 04, 2026 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 05:41 PM ADDED : நவ 04, 2026 05:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்:சுயமாகச் செயல்படும் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்கள், பயனர்களின் அனுமதியின்றி, கணினி அமைப்புகளுக்குள் நுழைவதுடன், தேவையற்ற பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தகவல்களை அனுப்பும் அபாயம் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்கப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் (SEC) தாக்கல் செய்த தனது வருடாந்திர நிதிநிலை மற்றும் இடர் காரணிகள் தொடர்பான அறிக்கையில் ஆப்பிள் நிறுவனம் இந்த அதிர்ச்சித் தகவலைப் பதிவு செய்துள்ளது.

கட்டுப்பாட்டை மீறும் 'ரோக்' ஏஜென்ட்கள்

தற்போது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் சுயமாக இயங்கும் 'ஏஜென்டிக் ஏஐ' அமைப்புகள், பயனர்களின் சார்பில் சிக்கலான பணிகளைச் செய்யும் திறன் கொண்டவை. ஆனால், இவற்றால் ஏற்படும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஆப்பிள் சுட்டிக்காட்டியுள்ளது

இந்த ஏஐ ஏஜென்ட்கள், பயனரின் நேரடி உத்தரவு அல்லது அனுமதியின்றி சுயமாகவே பிற அமைப்புகளை அணுகுவது, மென்பொருள் குறியீடுகளை மாற்றுவது, தகவல்தொடர்புகளை அனுப்புவது மற்றும் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து முடிக்கும் ஆபத்து உள்ளது.

கட்டளைகளை மீறுதல்

தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டி செயல்படுவதுடன், மனிதர்கள் இடும் கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டு அல்லது அதற்கு முரணாக எதிர்பாராத வழிகளில் இந்த அமைப்புகள் செயல்படக்கூடும். தவறான வழியில் செல்லும் விஷம ஏஐ ஏஜென்ட்கள், தங்களது செயல்பாடுகளைத் திட்டமிட்டு மறைக்கவோ, முக்கியத் தகவல்களைத் திரித்து மாற்றவோ அல்லது போலியான தகவல்களை உருவாக்கவோ வாய்ப்புள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்களின் அச்சம்

ஆப்பிள் மட்டுமின்றி ஆல்பாபெட் (கூகுள்), மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஏற்கெனவே இதுபோன்ற சுயமாக இயங்கும் ஏஐ ஏஜென்ட்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து எச்சரித்துள்ளன. அண்மையில் பாதுகாப்புச் சோதனைகளின் போது சில ஏஐ மாடல்கள் கணினி அமைப்புகளுக்குள், அனுமதியின்றி நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா, இத்தகைய ஏஜென்ட்களை நிறுவனங்களுக்குள் இருக்கும் உள் அச்சுறுத்தலாகக் கருதி வெளிப்புறப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கட்டமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

விழிப்புணர்வு தேவை

இது தொடர்பாகப் பேசியுள்ள ஆப்பிள் நிர்வாகிகள், '' ஏஐ ஏஜென்ட்கள் பயனர்களுக்குப் பயனுள்ள கருவியாக இருந்தாலும், அத்தகைய அமைப்புகளுக்கு எத்தகைய அனுமதிகளை வழங்குகிறோம் என்பதைப் பயனர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us