அதிக சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்புங்க : சீனா அரசுக்கு அதிபர் வலியுறுத்தல்
அதிக சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்புங்க : சீனா அரசுக்கு அதிபர் வலியுறுத்தல்
ADDED : ஜன 09, 2024 10:44 PM

புதுடில்லி: அதிக சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சீனாவை மாலத்தீவு அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய
பெருங்கடலில் உள்ள குட்டி நாடு மாலத்தீவு. இயற்கை அழகு மிகுந்த
இந்நாட்டிற்கு சர்வதேச சுற்றுலாபயணியர் மொய்க்கின்றனர். அவர்களில் அதிகம்
பேர் இந்தியர்கள்.
பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்
லட்சத்தீவு சென்றார். அங்கு ஆழ்கடலில், 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்'
பதிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். ஆழ்கடலில் நீச்சல் அடித்தும்,
கடற்கரையில் வாக்கிங் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார் மோடி..இப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இவ்வளவு
அழகான லட்சதீவு இந்தியாவில் இருக்கும் போது மாலத்தீவுக்கு ஏன் நாம்
சுற்றுலா போக வேண்டும் என்ற கருத்து தீயாக பரவியது. இந்த கருத்தை
ஆட்சேபித்து மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் மோடியை விமர்சித்தனர்.
இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படவே மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட்
செய்யப்பட்டனர்.
சீனா சென்ற முகமது முய்சு
இந்த
பரபரப்பான சூழ்நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு
முறைப்பயணமாக சீனா சென்றார். பியூஜியோ மாகாணத்தில் நடந்த வர்த்தக
அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முகமது முய்சு பேசுகையில்,
மாலத்தீவு வளர்ச்சியில் சீனாவின் பங்கு அதிகம். தாராள வர்த்தக ஒப்பந்தம்
மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது, ஆகியவற்றில்
முன்னுரிமை அளிக்கிறது. எனவே எங்கள் நாட்டிற்கு அதிக எண்ணிக்கை யிலான
சுற்றுலா பயணிகளை சீனா அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.