பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மரணம்
பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மரணம்
ADDED : செப் 07, 2025 01:04 AM

லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான கேத்தரின், 92, உயிரிழந்தார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த ராணி எலிசபெத்தின் ஒன்றுவிட்ட சகோதரர், கென்ட் 'டியூக்' இளவரசர் எட்வர்ட். இவருடைய மனைவி கேத்தரின், 92, வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
பிரிட்டன் அரசக் குடும்பத்தில், பல நிலப்பரப்புகள், டியூக் என்று அழைக்கப்படுகிறது. இதற்கென, இளவரசர் நியமிக்கப்படுகிறார். இவரை கோமான் என்கின்றனர். அவருடைய மனைவியை, 'டியூச்சஸ்' எனப்படும் சீமாட்டி என்று அழைக்கின்றனர்.
இதன் கென்ட் பகுதியின் சீமாட்டியாக இருந்தவர் கேத்தரின். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பின், அரசக் குடும்பத்தில் மிகவும் அதிக வயதுடையவராக இருந்தார். இவருடைய கணவரான இளவரசர் எர்வர்ட், 89, தற்போது அரசக் குடும்பத்தின் அதிக வயதுடையவராக மாறியுள்ளார்.