sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட பகீர் அறிவிப்பு

/

கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட பகீர் அறிவிப்பு

கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட பகீர் அறிவிப்பு

கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட பகீர் அறிவிப்பு

1


ADDED : ஏப் 01, 2025 09:09 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 09:09 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளது. மெகா நிலநடுக்கத்தால் 3 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மூன்றாயிரம் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானுக்கு மெகா நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான் உலகின் நிலநடுக்கங்களை அதிகம் சந்திக்கும் நாடுகளில் ஒன்று. காரணம் பசிபிக் தீவிர வளையம் (Pacific Ring of Fire) எனப்படும் பூகம்பத்தகட்டு சந்திப்பு பகுதியில் அமைந்திருப்பதே ஆகும். ஜப்பானில் உள்ள நாங்காய் பள்ளத்தாக்கு (Nankai Trough) நிலநடுக்கத்தின் மையமாக உள்ளது. இது இரட்டை பூகம்பத் தகடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது.

இங்கு பிலிப்பைன் கடல் தட்டும், யூரேசிய தட்டும் மோதிக்கொள்கின்றன. இதன் காரணமாக பூமியின் உள் அழுத்தம் அதிகரித்து, ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் உருவாகும் அபாயம் உள்ளது. சராசரியாக ஒவ்வொரு 100 முதல் 150 வருடங்களுக்கும் இடையே இந்தப் பகுதி பெரிய பூகம்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறது.

ஜப்பான் அரசு சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கையின் படி, நாங்காய் பள்ளத்தாக்கு (Nankai Trough) பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் உண்டாகும் சுனாமி அலைகள் ஜப்பானின் கடற்கரை நகரங்களை தாக்கும்.

இது 3 லட்சம் இறப்புகளை உண்டாக்கும். 1.5 டிரில்லியனுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும் என ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலநடுக்கம் எப்போது நடக்கும் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை. ஆனால் விரைவில் அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us