சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக்: பாக்., நடிகையுடன் திருமணம்
சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக்: பாக்., நடிகையுடன் திருமணம்
ADDED : ஜன 20, 2024 04:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் சோயிப் மாலிக், அந்நாட்டு நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டார்.
முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து விட்டனர் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்நிலையில், சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல் சனா ஜாவேதும் தனது சமூக வலைதளத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதன் மூலமாக சானியா மிர்சா, சோயிப் மாலிக் இருவரும் பிரிந்தது உறுதியாகி உள்ளது.