ADDED : ஜூலை 27, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஹ்ரான் : மேற்காசிய நாடான ஈரானின் ஸாஹிதான் நகரில் உள்ள நீதிமன்றத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் ஆறு பேர் பலியாகினர். பாதுகாப்பு படை யினரின் பதிலடியில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஈரானின் சிஸ்தான் மற்றும் பாகிஸ் தானின் பலுசிஸ்தானை இணைத்து தனி நாட்டு கேட்டு போராடும் ஜெய்ஷ் - அல் - அதுல் பயங்கரவாதிகள் என தெரிய வந்துள்ளது.

