sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஐ.பி.எல்.,ஏலம்: ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்தது ஜாக்பாட்:மீண்டும் சென்னை அணியில் அஸ்வின்

/

ஐ.பி.எல்.,ஏலம்: ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்தது ஜாக்பாட்:மீண்டும் சென்னை அணியில் அஸ்வின்

ஐ.பி.எல்.,ஏலம்: ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்தது ஜாக்பாட்:மீண்டும் சென்னை அணியில் அஸ்வின்

ஐ.பி.எல்.,ஏலம்: ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்தது ஜாக்பாட்:மீண்டும் சென்னை அணியில் அஸ்வின்

3


UPDATED : நவ 24, 2024 10:37 PM

ADDED : நவ 24, 2024 04:27 PM

Google News

UPDATED : நவ 24, 2024 10:37 PM ADDED : நவ 24, 2024 04:27 PM

3


Google News

முழு விபரம்

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெட்டா: ஐ.பி.எல்., வீரர்கள் மெகா ஏலத்தில், ரூ.27 கோடிக்கு ரிஷப் பன்ட்டை லக்னோ அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்து உள்ளது. இதற்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயரை, ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008 முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி--20' தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை 17 சீசன் முடிந்துள்ளன. இதன் 18வது சீசன், அடுத்த ஆண்டு மார்ச் 14ல் துவங்குகிறது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம் இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் துவங்கியது.

ஐ.சி.சி., தலைவராக தேர்வாகி உள்ள ஜெய்ஷா, பி.சி.சி.ஐ., தலைவர் ரோஜர் பின்னி, அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்ற நிலையில், அவர்களில் 367 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 210 பேர் வெளிநாட்டினர்.

சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. பத்து அணிகள் சார்பில் 46 பேர் தக்கவைக்கப்பட்டனர்.அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 6 வீரர்களை தக்கவைத்தது. சென்னை, கோல்கட்டா, மும்பை, லக்னோ, ஐதராபாத், குஜராத் அணிகள் தலா 5, டில்லி 4, பெங்களூரு 3, பஞ்சாப் 2 வீரர்களை தக்கவைத்தன. இவர்களுக்கு ரூ. 558.5 கோடி செலவிடப்பட்டது.

சர்வதேச 'டி-20' போட்டியில் 96 விக்கெட் சாய்த்துள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், முதல் நபராக ஏலத்திற்கு வந்தார். இவரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்தது. ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணி 'ரைட் டு மேட்ச்' கார்டை பயன்படுத்தி தக்க வைத்தது

தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவை ரூ.10.75 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது.

ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க டில்லி, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், அவரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி இவரை ஏலம் எடுத்தது.

ரிஷப் பன்ட்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் என்ற பெருமை ரிஷப் பன்ட்டுக்கு கிடைத்தது. இவரது ஆரம்ப தொகையாக ரூ.2 கோடி இருந்தது.

இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் - ரூ.15.75 கோடி ( குஜராத் அணி).

ஆஸி., வீரர் மைக்கேல் ஸ்டார்க் - ரூ.11.75 கோடி( குஜராத் அணி)

இந்திய வீரர் முகமது ஷமி- ரூ.10 கோடி( ஐதராபாத் அணி)

தென் ஆப்ரிக்க வீரர் டேவிட் மில்லர்- ரூ.7.50 கோடி( லக்னோ அணி)

இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் - ரூ.18 கோடி ( பஞ்சாப் அணி)

இந்திய அணி வீரர் முகமது சிராஜ்- ரூ.12.25 கோடி( குஜராத் அணி)

இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் -8.75 கோடி( பெங்களூரு அணி)

இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் - ரூ.14 கோடி( டில்லி அணி)

இந்திய அணி வீரர் அஸ்வின்- ரூ.9.75 கோடி( சென்னை அணி)

நியூசி., வீரர் ரச்சீன் ரவீந்திரா- ரூ. 4 கோடி ( சென்னை அணி)

தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டீ காக் - ரூ.3.60 கோடி ( கோல்கட்டா அணி)

ஆஸி., வீரர் கிளென் மேக்ஸ்வெல் - ரூ.4.20 கோடி (பஞ்சாப்அணி)

ஆஸி., வீரர் மிச்சல் மார்ஷ்- ரூ.3.40 கோடி ( லக்னோ அணி)

ஆஸி., வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் - ரூ.11 கோடி( பஞ்சாப் அணி)

இந்திய அணி வீரர் வெங்கடேஷ் ஐயர்- ரூ.23.75 கோடி( கோல்கட்டா அணி)

இந்திய அணி வீரர் ஹர்சல் படேல் - ரூ.8 கோடி( ஐ தராபாத் அணி)

ஆஸி.,யின் ஜேக் பிராசர் மெக்கர்க் - ரூ.9 கோடி ( டில்லி அணி)

இந்திய அணி வீரர் ராகுல் திரிபாதி- ரூ.3.40 கோடி ( சென்னை அணி)

நியூசிலாந்து வீரர் தேவன் கோன்வே ரூ.6.25 கோடி (சென்னை அணி)

தென் ஆப்ரிக்கா எய்டன் மார்க்ரம் ரூ.2 கோடி (லக்னோ அணி)

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ரூ.6.25 கோடி (டில்லி அணி)

இந்திய வீரர் கருண் நாயர் - ரூ.50 லட்சம் ( டில்லி அணி)

இந்திய வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி - ரூ.3 கோடி (கோல்கட்டா அணி)

இந்திய வீரர் நேகல் வதேரா -ரூ.4.20 கோடி (பஞ்சாப்அணி)

இந்திய வீரர் அதர்வா தைடே ரூ.30 லட்சம் (ஐதராபாத் அணி)

ஆப்கன் வீர் நூர் அஹமது-ரூ. 10 கோடி (சென்னை அணி)

இலங்கையின் வனிந்து ஹசரங்கா- ரூ.5.25 கோடி( ராஜஸ்தான் அணி)

ஆஸி., வீரர் ஆடம் ஜம்பா-ரூ. 2.40 கோடி (ஐதராபாத் அணி)

இந்திய வீரர் ராகுல் சஹார் ரூ.3.20 கோடி (ஐதராபாத் அணி)

இலங்கை வீரர் மஹீஷ் தீக்சனா-ரூ. 4.40 கோடி( ராஜஸ்தான் அணி)

நியூசி, டிரெண்ட் போல்ட்-ரூ. 12.50 கோடி (மும்பை அணி)

இந்திய வீரர் நடராஜன்-ரூ. 10.75 கோடி (டில்லி அணி)

இந்திய வீரர் கலீல் அகமது-ரூ. 4.80 கோடி (சென்னை அணி)

இங்கிலாந்து ஜோப்ரா ஆர்சர் -ரூ. 12.50 கோடி (ராஜஸ்தான் அணி)

தென் ஆப்ரிக்காவின் அன்ரிச் நோர்ட்ஜே-ரூ. 6.50 கோடி (கோல்கட்டா அணி)

இந்திய வீரர் அவனீஸ் கான்-ரூ. 9.75 கோடி (லக்னோ அணி)

இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா -ரூ.9.5 கோடி (குஜராத் அணி)

ஆஸி., வீரர் ஜோஷ் ஹசில் உட் - ரூ.12. 50 கோடி (பெங்களூரு அணி)

இந்திய வீரர் ஜிதேஷ் சர்மா - ரூ.11 கோடி (பெங்களூரு அணி)

இந்திய வீரர் இஷான் கிசன் -ரூ. 11.25 கோடி (ஐதராபாத் அணி)

ஆப்கன் ரஹ்மானுல்லா குர்பாஸ்-ரூ. 2 கோடி (கோல்கட்டா அணி)

இங்கிலாந்து வீரர் பில் சால்ட்-ரூ.11.50 கோடி (பெங்களூரு அணி)

இந்திய வீரர் சமீர் ரிஜ்வி -ரூ.95 லட்சம் (டில்லி அணி)

இந்திய வீரர் நிஷாந்த் சிந்து-ரூ.30 லட்சம் (குஜராத் அணி)

இந்திய வீரர் அபிநவ் மனோகர்-ரூ. 3.20 கோடி (ஐதராபாத் அணி )

இந்திய வீரர் நிஷாந்த் சிந்து - ரூ.30 லட்சம் (சென்னை அணி)

இந்திய வீரர் அப்துல் சமத் - ரூ.30 லட்சம் (லக்னோ அணி)

இந்திய வீரர் ஹர்ப்ரீத் பிரார் - ரூ.30 லட்சம் (பஞ்சாப் அணி)

இந்திய வீரர் விஜய் சங்கர்- ரூ. 30 லட்சம் சென்னை அணி)

இந்திய வீரர் மஹிபால் லோம்ரோர்- ரூ. 50 லட்சம் (குஜராத் அணி)

இந்திய வீரர் அசுதோஷ் சர்மா - ரூ.3.80 லட்சம் (டில்லி அணி)

இந்திய வீரர் குமார் குஷாக்ரா - ரூ.30 லட்சம் (குஜராத் அணி)

இந்திய வீரர் ராபின் மின்ஜ் - ரூ.30 லட்சம் (மும்பை அணி)

இந்திய வீரர் அனுஜ் ராவத்- ரூ. 30 லட்சம் (குஜராத் அணி)

இந்திய வீரர் ஆர்யன் ஜூயல் - ரூ.30 லட்சம் (லக்னோ அணி)

இந்திய வீரர் விஷ்ணு வினோத் - ரூ. 30 லட்சம் (மும்பை அணி) ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

விலை போகாத வீரர்கள்


இங்கிலாந்து வீரர் ஜானி பெயிர்ஸ்டவ், இந்திய வீரர் தேவ்தத் படிக்கல், ஆஸி வீரர் டேவிட் வார்னர்,இந்திய வீரர் யஷ் துல் , இந்திய வீரர் அன்மோல் ப்ரீத் சிங்,ஆப்கன் வீரர் வக்கார் சலாம் கெயில், உத்கார்ஷ் சிங், உபேந்திர யாதவ் ஆகியோர் இன்றைய ஐ.பி.எல்., ஏலத்தில் விலை போகவில்லை.






      Dinamalar
      Follow us