ADDED : ஜன 23, 2026 02:43 AM

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 'மரப் பெண்' என்று அழைக்கப்பட்ட கீர்திடா மேகானி, 66, மாரடைப்பால் நேற்று காலமானார்.
நம் நாட்டின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கீர்திடா மேகானி, ஆசிய நாடான சிங்கப்பூரில் 1990ல் கணவருடன் குடியேறினார். கீர்திடாவுக்கு, தன் குடும்ப பண்ணையில் குழந்தைப் பருவத்தில் துவங்கிய இயற்கை மீதான ஆர்வம், சிங்கப்பூரின் சுற்றுச்சூழல், சமூக சேவை, கலாசார பாரம்பரியத்தில் முக்கிய பங்காற்ற வைத்தது.
சிங்கப்பூர் சுற்றுச்சூழல் கவுன் சிலின் மு தல் செயலராகப் பணி யாற்றிய அவர், 50க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தினார். அவரது முயற்சியால் 76,000-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட உள்நாட்டு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த, 2015-ல் சுற்றுச்சூழலுக்கான, அதிபர் விருது பெற்றார் .

