ADDED : செப் 08, 2025 07:10 PM

ஜெருசலேம்: ஜெருசலேமில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் அந்த அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதனிடையே, ஜெருசலேமின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள பஸ்ஸ்டாப் ஒன்றில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த இஸ்ரேல் வீரர் ஒருவர், பாலஸ்தீனத்தை சேர்ந்தவரை சுட்டுக் கொன்றார். இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். துப்பாக்கிச்சூட்டில் அந்த வழியாக வந்த பஸ் கண்ணாடியும் சிதறி விழுந்தது.
அந்த இடத்துக்கு வந்து ஆய்வு செய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் ராணுவ வீரருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் மேற்கு கரை, காசா, உள்ளிட்ட இடங்களில் பல முனை போரில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தார்.