sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சிறுவனாக காணாமல் போனவர் முதியவராக திரும்பி வந்தார்: கண்டறிந்த உறவினர்கள் கண்ணீர்

/

சிறுவனாக காணாமல் போனவர் முதியவராக திரும்பி வந்தார்: கண்டறிந்த உறவினர்கள் கண்ணீர்

சிறுவனாக காணாமல் போனவர் முதியவராக திரும்பி வந்தார்: கண்டறிந்த உறவினர்கள் கண்ணீர்

சிறுவனாக காணாமல் போனவர் முதியவராக திரும்பி வந்தார்: கண்டறிந்த உறவினர்கள் கண்ணீர்

2


UPDATED : செப் 23, 2024 02:48 PM

ADDED : செப் 23, 2024 02:31 PM

Google News

UPDATED : செப் 23, 2024 02:48 PM ADDED : செப் 23, 2024 02:31 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1951ம் ஆண்டில், 6 வயதில் கடத்தப்பட்டவர் 79 வயதில் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் அர்மாண்டோ அல்பினோ. இவர் 70 ஆண்டுகளுக்கு முன், பிப்ரவரி 21ம் தேதி 1951ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள பூங்கா ஒன்றில் நண்பருடன் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அவரை இனிப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி ஒரு பெண் கடத்தி சென்றுள்ளார். இதையடுத்து பெற்றோர் நீண்ட காலமாக போராடியும் எந்த பயனும் இல்லை.

70 ஆண்டுகளுக்கு மேலாக அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. ஆனால் அவர் எப்போதும் அவரது குடும்பத்தினரின் இதயங்களில் இருந்தார். தற்போது, 6 வயதில் கடத்தப்பட்டவர் 79 வயதில் குடும்பத்துடன் இணைந்தார். அல்பினோவின் உறவினர் (மருமகள்) போலீஸ் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் உதவியுடன் அவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தார்.

அவர் எனது மாமா. என்னை கட்டிப்பிடித்து, என் கன்னத்தில் முத்தம் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆன்லைனில் டி.என்.ஏ., பரிசோதனையை மேற்கொண்டார். இது தான் மாமாவை மீட்க உதவியது என்கிறார் அல்பினோ மருமகள். துரதிர்ஷ்டவசமாக, 2005ல் தனது 92 வயதில் தாயார் காலமான போது, அல்பினோ குடும்பத்தில் சேரவில்லை. இது தான் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்கின்றனர் அல்பினோ குடும்பத்தினர்.

கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரில் குழந்தை இல்லாத தம்பதியால் வளர்க்கப்பட்டான். அந்த சிறுவன் வளர்ந்து தீயணைப்பு வீரராக பணியாற்றியுள்ளான். வியட்நாம் போரிலும் அமெரிக்கா சார்பில் ஈடுபட்டுள்ளான் என்பது கண்டுபிடிக்கப்பட்ட அல்பினோ கூறியதன் மூலம் தெரிய வந்தது. 72 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, காணாமல் போன சிறுவன் பற்றிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. எனினும் சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்கை என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us