தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/பாகிஸ்தான் சீர்வரிசையில் சோலார் தகடு மின்கட்டணத்தால் புரட்சி

பாகிஸ்தான் சீர்வரிசையில் சோலார் தகடு மின்கட்டணத்தால் புரட்சி

பாகிஸ்தான் சீர்வரிசையில் சோலார் தகடு மின்கட்டணத்தால் புரட்சி


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வரும் மின் கட்டண உயர்வும், அடிக்கடி ஏற்படும் மின்தடைகளும் பொதுமக்களை பாடாய்படுத்தி எடுத்து வருகிறது.

இதிலிருந்து தப்பிக்க நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் கூட மாற்று எரிபொருளான சூரிய ஒளியை நோக்கிப் படையெடுத்துள்ளன. இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தான் உலகளவில் அதிக அளவில் சோலார் சாதனங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

அதிலும், புதிதாக திருமண வாழ்க்கையைத் தொடங்கும் தம்பதிகளின் எதிர்காலம், மின்சார கட்டணச் சுமையால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பெற்றோர் இப்போது வரதட்சணை அல்லது சீர்வரிசையாக சோலார் பேனல்கள், இன்வெ்ட்டர்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட பேட்டரிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

தங்கம், வைர நகைகளை விட, மின்வெட்டிலிருந்து காப்பாற்றும் சூரியத் தகடுகளே உண்மையான பொக்கிஷம் என்று பாக்., மக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us