ஒரே ஏவுதளத்தில் இருந்து அடுத்தடுத்து 2 ராக்கெட்டுக்கள் விண்ணில் பாய்ந்தது; ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை
ஒரே ஏவுதளத்தில் இருந்து அடுத்தடுத்து 2 ராக்கெட்டுக்கள் விண்ணில் பாய்ந்தது; ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை
ADDED : நவ 23, 2026 04:49 PM

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒரே ஏவுதளத்திலிருந்து 2 ராக்கெட்டுகளை ஏவிய ஸ்பேஸ்எக்ஸ், சாதனை படைத்தது.
குறுகிய நேர இடைவெளியில் இரு Falcon 9 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டன. 32 மணி நேரம், 3 நிமிடங்கள் மற்றும் 21 வினாடிகள் இடைவெளியில் இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு புளோரிடாவில் உள்ள ஏவுதளம் 40-ல் 45 மணி நேர இடைவெளியில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவியதே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது. அடுத்த இலக்கு,24 மணி நேரத்தில் முடிப்பது என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிகோ டோன்ட்சேவ் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது 15வது ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணில் ஏவியது. வரலாற்றில் முதல் முறையாக, விண்ணில் இருந்து திரும்பி வந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை ஏவுதளத்தில் இருந்த ராட்சத இயந்திரக் கரங்கள் மூலம் பத்திரமாகப் பிடித்து சாதனை படைத்தது. தற்போது மீண்டும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
