தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/10 லட்சம் செயற்கைகோள்களை அனுப்ப ‘ஸ்பேஸ்எக்ஸ்’ திட்டம்

10 லட்சம் செயற்கைகோள்களை அனுப்ப ‘ஸ்பேஸ்எக்ஸ்’ திட்டம்

10 லட்சம் செயற்கைகோள்களை அனுப்ப ‘ஸ்பேஸ்எக்ஸ்’ திட்டம்


UPDATED : நவ 26, 2026 06:58 PM

ADDED : நவ 26, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 06:58 PM ADDED : நவ 26, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்காக விண்வெளியில், 10 லட்சம் செயற்கைக்கோள்களை கொண்ட, `டேட்டா சென்டர்' எனப்படும் தரவு சேமிப்பு மையத்தை அமைக்கும், `ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் திட்டத்துக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஏ.ஐ., செயல்பாடுகளுக்கு அதிக திறன் கொண்ட டேட்டா சென்டர்கள் அவசியம். ஆனால், அவற்றை இயக்குவதற்கும், குளிர்விப்பதற்கும் மிக அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்கு மாற்றாக, விண்வெளியில் சூரிய சக்தியை பயன்படுத்தி டேட்டா சென்டர்களை இயக்க அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்கின், ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, ஸ்பேஸ்எக்சின் ‘ஸ்டார்மைண்டு’ என்ற திட்டத்துக்கு அமெரிக்காவின் தொலைத் தொடர்பு ஆணையம் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதன் வாயிலாக விண்வெளியில் உள்ள கணினி அமைப்புகளை பயன்படுத்தி, பூமிக்கு தேவையான அதிகப்படியான தரவுகளை செயல்படுத்த முடியும்.

இதற்காக, 10 லட்சம் செயற்கைக்கோள்களை அனுப்ப, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும், 2033 நவம்பருக்குள் செயற்கைகோள்களை அனுப்பும் பணி தொடங்க உள்ளது. வரும், 2035க்குள் ஒரு லட்சம் செயற்கைக்கோள்களையும், 2038க்குள், 50 சதவீத செயற்கைகோள்களையும் விண்ணில் நிலைநிறுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உலகம் முழுதும் 17,000 செயற்கைக்கோள்கள் மட்டுமே புவி வட்டபாதையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மெகா திட்டத்தின் வெற்றி, ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வரும் அடுத்த தலைமுறை ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட்டின் வளர்ச்சியை பெருமளவில் சார்ந்துள்ளது. இந்த ராக்கெட்டின் மூலம் குறைந்த செலவில் அதிக செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்பேஸ்எக்சின் இத்திட்டத்துக்கு, `அமேசான்' உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us