கார் ரேஸில் மீண்டும் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அஜித்
கார் ரேஸில் மீண்டும் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அஜித்
ADDED : பிப் 22, 2025 10:22 PM

வாலென்சியா: ஸ்பெயினில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
விடாமுயற்சி படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்.,10ம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் நடித்து வந்த அஜித், கடந்த சில தினங்களாக கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்தது. இந்த ரேஸில் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. அதில் காயமின்றி அவர் தப்பினார்.
இதைத் தொடர்ந்து, ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடந்த ரேஸில் அஜித் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், தற்போது ரேஸில் பங்கேற்றார். ரேஸின் போது குறுக்கே வந்த ஒரு காரால், அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், அவரது கார் 3 முறை சுழன்றடித்தது. இருப்பினும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லேசான காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அஜித்தின் கார் விபத்துக்குள்ளான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதனை பார்க்கும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.