அதிவேகமாக வந்த கார் கூட்டத்தில் புகுந்தது: ஜெர்மனியில் ஒருவர் பலி; பலர் காயம்
அதிவேகமாக வந்த கார் கூட்டத்தில் புகுந்தது: ஜெர்மனியில் ஒருவர் பலி; பலர் காயம்
ADDED : மார் 03, 2025 08:31 PM

பெர்லின்: ஜெர்மனியின் மன்ஹெய்ம் நகரில் அதிவேகமாக பயணித்த கார் மக்கள் கூடும் இடத்தில் புகுந்ததில் ஒருவர் பலியானார்.
ஜெர்மனியில் தற்போது கார்னிவெல் பருவகாலம் என்பதால் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் நகரவாசிகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் செய்திதொடர்பாளர் ஸ்டீபன் வில்ஹெல்ம் கூறியதாவது:
மன்ஹெய்ம் நகரின் நடைபாதை தெருவான பாரடேப்ளாட்ஸில், ஒரு கருப்பு நிற எஸ்.யு.வி., காரை ஓட்டி வந்த டிரைவர் அதிவேகமாக வந்து கூட்டத்தின் மீது புகுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். காரை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பொதுமக்களிடம் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு ஸ்டீபன் வில்ஹெல்ம் கூறினார்.