இந்தியாவின் அதிருப்தி எதிரொலி: பாக். உடனான கடற்படை பயிற்சி திட்டத்தை ரத்து செய்த இலங்கை
இந்தியாவின் அதிருப்தி எதிரொலி: பாக். உடனான கடற்படை பயிற்சி திட்டத்தை ரத்து செய்த இலங்கை
UPDATED : ஏப் 19, 2025 10:35 AM
ADDED : ஏப் 19, 2025 08:15 AM

கொழும்பு: இந்தியாவின் அழுத்தமான அதிருப்தியை தொடர்ந்து, பாகிஸ்தானுடன் நடத்த இருந்த கடற்படை பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளது.
திரிகோணமலை கடற்பகுதியில் இலங்கை பாகிஸ்தான் நாடுகள் இடையே கடற்படைகள் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு தொடர்பான தமது கவலைகளையும், அதிருப்தியையும் இந்தியா தெரிவித்து இருந்தது.
இதையடுத்து, இலங்கை, பாக்., படைகள் மேற்கொள்ள இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கை வடகிழக்கு கடலோர பகுதியாக திரிகோணமலை, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு நலன்களுக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடியின் சமீபத்திய இலங்கை பயணத்தின் போது திரிகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

