தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ புயல் நிவாரண பணிகளுக்காக இலங்கைக்கு கிடைத்தது ரூ.252 கோடி

 புயல் நிவாரண பணிகளுக்காக இலங்கைக்கு கிடைத்தது ரூ.252 கோடி

 புயல் நிவாரண பணிகளுக்காக இலங்கைக்கு கிடைத்தது ரூ.252 கோடி


ADDED : ஜன 24, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொழும்பு: 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து, 252 கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த நவ., - டிசம்பரில் கோரத்தாண்டவமாடிய, டிட்வா புயல் பாதிப்பில், 640க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி, 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான வீடுகள், சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.

டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு, 700 கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

அந்நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, நம் நாடு, 4,050 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், 47 நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் கிடைத்துள்ளன.

அதன் மொத்த மதிப்பு 252 கோடி ரூபாய். இந்த தொகை வெளிநாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், வெளிநாட்டு இலங்கை வாசிகள், தனிநபர்கள் மூலம் வழங்கப்பட்டு உள்ளன. இதில் அமெரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us